வேலூர்: 14 வயது சிறுமியை 55 வயது முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தாய்.!
தனது 14 வயது மகளை தனது இரண்டாவது கணவரின் அண்ணன் லோகநாதன் 55, என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளார். இதில் சிறுமி கருவுற்றதால் அதனை கலைப்பதற்காக மருத்துவமனை சென்றுள்ளனர்.

By : Thangavelu
55 வயது முதியவருக்கு 14 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த தாய் மற்றும் திருமணம் செய்துகொண்ட 55 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், கருகம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழில் செய்து வரும் பெண், தனது கணவனை இழந்த நிலையில், அப்பகுதியில் வேறு ஒருவரை மறுமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கு 14 வயதில் சிறுமி ஒருவர் உள்ளார்.
இந்நிலையில், தனது 14 வயது மகளை தனது இரண்டாவது கணவரின் அண்ணன் லோகநாதன் 55, என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளார். இதில் சிறுமி கருவுற்றதால் அதனை கலைப்பதற்காக மருத்துவமனை சென்றுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த மருத்துவர்கள் விருஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்து வைத்த தாய் மற்றும் திருமணம் செய்து கொண்ட முதியவர் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெற்ற தாயே முதியவருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
