வேலூரில் பட்டாசு கடையில் தீ விபத்து.. மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு.!
இந்த விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது 2 பேரக்குழந்தைகள் தீக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
By : Thangavelu
வேலூர் அருகே பட்டாசுக்கடையில் ஏற்பட்ட திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர், லத்தேரி பகுதியில் மோகன் என்பவர் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று அந்த கடையில் தீடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடிக்க ஆரம்பித்தது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலங்களாக காட்சி அளித்தது.
இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது 2 பேரக்குழந்தைகள் தீக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.