அம்மன் சிலையை பெயர்த்து சேதப்படுத்திய கும்பல்: திரண்ட மக்கள்!
வேலூர் அருகே அம்மன் சிலையை பெயர்த்து சேதப்படுத்திய கும்பல் போலீசார் தீவிர விசாரணை.
By : Bharathi Latha
வேலூர் மாவட்டத்தில் காட்டம்பட்டி காங்கேயநல்லூர் மேலாண்ட தெரு புளியந்தோப்பு பகுதியில் அமைந்துள்ளது தான் படவேட்டம்மன் கோவில். இந்த கோவிலில் உள்ள அம்மன் உருவம் பதித்த கல்வெட்டு தற்போது பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகாலமாக இந்த கிராம மக்கள் அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட அந்த சிலையை தான் கடவுளாக வழிபட்ட வருகிறார்கள்.
இந்த சிலை உடைக்கப்பட்டதன் காரணமாக கிராம மக்கள் தற்போது ஒன்று திரண்டு உள்ளார்கள். இதன் காரணமாக அங்கு விரைந்த போலீசார்ந்த பொது தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று இரவு இந்த அம்மன் சிலை கல்வெட்டை மர்ம நபர்கள் தகர்த்தெறிய பார்த்திருக்கிறார்கள். இன்று காலையில் அந்த பகுதி ஊர் பொதுமக்கள் வந்து பார்க்கும் பொழுது தான் அம்மன் சிலை செய்த பட்டிருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது மேலும் அம்மன் சிலை கல்வெட்டு கீழே சாய்ந்து கிடப்பதும் உடனடியாக தகவல் அறிந்து அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டார்கள்.
மது போதை காரணமாக பல்வேறு மர்ம நபர்கள் அந்த பகுதியில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்று ஊர் பொதுமக்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக அவர்களை உடனடியாக கைது செய்த நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் போராட்டத்தில் களம் இறங்கினார்கள். தகவல் அறிந்து சென்ற விருதம் பட்டு போலீசார் இத்தகை நடவடிக்கை ஈடுபட்டவர் மீது உடனடி விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி ஊர் பொதுமக்களை தற்போது சமாதானம் செய்திருக்கிறார்கள்.
Input & Image courtesy:Maalaimalar News