Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து கடவுள், பிரதமர் மோடியை விமர்சனம் செய்த பாதிரியாருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வி.எச்.பி. எதிர்ப்பு!

இந்து கடவுள், பிரதமர் மோடியை விமர்சனம் செய்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவிற்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வி.எச்.பி. சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து கடவுள், பிரதமர் மோடியை விமர்சனம் செய்த பாதிரியாருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வி.எச்.பி. எதிர்ப்பு!
X

ThangaveluBy : Thangavelu

  |  30 Sept 2021 6:30 AM

இந்து கடவுள், பிரதமர் மோடியை விமர்சனம் செய்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவிற்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வி.எச்.பி. சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் சில மாதங்களுக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பாதிரியார் ஜார்ஜ் பொன்னை, இந்து கடவுள்கள் மற்றும் பிரதமர் மோடி குறித்து தவறாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று இந்துக்கள் மற்றும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த பாதிரியாரை கடந்த ஜூலை 24ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதன் பின்னர் உடல்நிலையை காரணம் காட்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஆகஸ்ட் 10ம் தேதி நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சமூக பணியில் ஈடுபட்டுள்ளேன். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே என் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கு குறிப்பிட்டிருந்தார்.

அப்போது கன்னியாகுமரி மாவட்ட வி.எச்.பி. தலைவர் குமரேசதாஸ் மனுதாரர் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். எனவே அவர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று மனுத்தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து நீதிபதி நவம்பர் 12ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News