தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர்கள் நூதன முறையில் போராட்டம்.!
தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர்கள் நூதன முறையில் போராட்டம்.!
By : Kathir Webdesk
தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர்கள் ரத்தத்தில் கையெழுத்திட்டு தங்களது கோரிக்கை மனுக்களை முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கிராம உதவியாளர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.
அரசுக்கு அவர்கள் வைக்கும் கோரிக்கையானது: கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும்.
மேலும், காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பவும், பதவி உயர்வு பெற்றவர்களின் ஓய்வூதிய குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று தங்களின் மனுவில் ரத்தத்தினால் கையெழுத்திட்டு நூதன முறையில் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போன்று மற்ற மாவட்டங்களிலும் ரத்தத்தில் கையெழுத்திட்டு மனு அனுப்பும் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நூதன முறை போராட்டம் அரசின் கவனத்தை பெறும் என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.