விழுப்புரம் - 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த மன்னர் சிலை கண்டுபிடிப்பு!
விழுப்புரம் அருகே 13ஆம் நூற்றாண்டில் சேர்ந்த குறுநில மன்னர் சிலை கண்டெடுக்கப் பட்டுள்ளது.
By : Bharathi Latha
திருப்பூர் அருகே திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ளது தான் ஆற்காடு என்று இடம். இந்த இடத்தில் பல்வேறு மன்னர்கள் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீர்த்தங்கரர் என்ற மன்னரின் சிலை அங்கு தான் கண்டெடுக்கப்பட்டது. இச்சமயத்தில் அங்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் போது தற்போது 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த குறுநில மன்னரின் சிலை கண்டெடுக்கப் பட்டுள்ளது. ஆற்காடு பகுதியை 13ம் நூற்றாண்டில் சேர்ந்த குறுநில மன்னனாக கோப்பெருஞ் சிங்கன் என்ற ஒரு மன்னர் ஆட்சி செய்து வந்தார். அந்த மன்னரின் சிலை தான் தற்போது சிதலம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
இது பற்றி விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பன்னாட்டு பேரவை வைத்த தலைவர் செங்குட்டுவர் அவர் கூறுகையில், தற்போது களப்பணியின் போது தலை இல்லாத மன்னர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த குறுநில மன்னரின் சிலை 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த என்பதும் உறுதியாக உள்ளது. 1219 முதல் 1229 வரை ஆற்காட்டு பகுதியை ஆட்சி செய்த கோப்பெருசிங்கன் என்ற குறுநில மன்னனின் உருவ சிலை தான் அது என்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இம்மன்னனின் முழு உருவச்சிலை ஆற்காடு அருகில் உள்ள புதூர் என்ற கிராமத்தில் கிடைக்கப் பெற்றது. மூன்றாம் ராஜராஜ சோழனை சிறை வைத்த பெருமையை பெற்றவர். கோப்பெரும் சிங்கன் என்ற இந்த மன்னரின் சிலை தான் தற்போது கிடைக்கப்பட்டுள்ளது. இவருடைய பெயர்களில் கல்வெட்டு பல்வேறு இடங்களில் தமிழகத்தில் கிடைக்கப்பெற்று உள்ளன. 13ம் நூற்றாண்டை சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற குறுநில மன்னராக இவர் விளங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: