Kathir News
Begin typing your search above and press return to search.

வாட்ஸ்அப் குறுஞ்செய்தி தகவலையும் மனுக்களாக எடுத்து நடவடிக்கை.. விழுப்புரம் ஆட்சியர் தகவல்.!

அது மட்டுமின்றி தனது அலைபேசி எண்ணிற்கு எப்போதும் தொடர்பு கொள்ளலாம். எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்திகள் மூலமாக புகார்கள் தெரிவிக்கலாம். இதனை புகாராக எடுத்துக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வாட்ஸ்அப் குறுஞ்செய்தி தகவலையும் மனுக்களாக எடுத்து நடவடிக்கை.. விழுப்புரம் ஆட்சியர் தகவல்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 Jun 2021 11:46 AM IST

விழுப்புரம் மாவட்ட புதிய ஆட்சியராக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக பதவி வகித்த மோகன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்க உள்ள ஆட்சியர்கள் எப்படி செயலாற்ற வேண்டும் என்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் முதலமைச்சர் 7 அம்ச திட்டத்தை செயல்படுத்த முழு கவனம் செலுத்தப்படும் என்றார். மேலும், பொதுமக்கள் திங்கட்கிழமைகளில் தன்னை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என்றும், கொரோனா இல்லாத மாவட்டமாக கொண்டுவருவதற்கு சுகாதாரத்துறையினர் ஒத்துழைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அது மட்டுமின்றி தனது அலைபேசி எண்ணிற்கு எப்போதும் தொடர்பு கொள்ளலாம். எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்திகள் மூலமாக புகார்கள் தெரிவிக்கலாம். இதனை புகாராக எடுத்துக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News