விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறிய அறநிலையத்துறை மீது பாய்ந்த இந்து மத வெறுப்பு தி.மு.க எம்.பி செந்தில்குமார்
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறிய இந்து சமய அறநிலையத் துறைக்கு இது உங்கள் வேலை இல்லை என்று கூறிய தி.மு.க அமைச்சர் செந்தில் குமார்.
By : Bharathi Latha
நேற்று இந்தியா முழுவதும் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி அன்று பல்வேறு தலைவர்களும் தங்களுடைய வாழ்த்து செய்தியை இந்திய மக்களுக்கு தெரிவித்து வந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் தி.மு.க மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிப்பதும் கிடையாது. இந்து மக்களை கண்டு கொள்வதும் கிடையாது. அதை மாதிரி நேற்று இந்து மக்களுக்கு வாழ்த்து கூறிய இந்து சமய அறநிலையத்துறையை இது உங்கள் வேலை கிடையாது என்று சாடி இருக்கிறார் தி.மு.க அமைச்சர் செந்தில்குமார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்து பண்டிகைகளுக்கு வழக்கம்போல் வாழ்த்து தெரிவிக்காத முதல்வரை வாழ்த்து தெரிவிக்குமாறு பா.ஜ.க தரப்பிலும் கோரிக்கை வலுவாக இருந்தது. எப்போதும் போலே மௌனம் சாதித்தது தி.மு.க.
இந்த சமயத்தில்தான் இந்து சமய அறநிலையத்துறை தன்னுடைய twitter பக்கத்தில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் என்று வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தது. இதற்கு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் திமுக எம்பி ஆன செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கருணாநிதி கூறியதாக ஒரு ட்விட்டர் பதிவையும் போட்டுள்ளார். "அதாவது இந்து சமய அறநிலையத்துறை என்பது மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வாகிக்கும் ஒரு அமைப்பு ஆகும். கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்தத் துறையின் பணி அல்ல" என்று அவர் பதிவிட்டு உள்ளார். ஏற்கனவே இதே போன்று ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி தொடங்கியது. அங்கு பூமி பூஜை நடந்து கொண்டிருந்ததை தடுத்து நிறுத்தி இது தி.மு.க மாடல் அரசாங்கம். எனவே இங்கு இது போன்ற விஷயங்கள் அனுமதி கிடையாது என்று கூறி தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.
Input & Image courtesy: News