லண்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு வீரியமிக்க கொரோனாவா? சுகாதாரத்துறை செயலர் என்ன சொல்கிறார்.!
லண்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு வீரியமிக்க கொரோனாவா? சுகாதாரத்துறை செயலர் என்ன சொல்கிறார்.!
By : Kathir Webdesk
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தற்போது வீரியமிக்க கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் லண்டனிலிருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு டிசம்பர் 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பயணிகள் 96 பேருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 29 பேருக்கு தொற்று அறிகுறி இருந்த நிலையில் ஒருவருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், இன்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் லண்டனில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இது உருமாற்றம் அடைந்த கொரோனாவா என்பதை கண்டறிவதற்காக அதன் மாதிரிகளை புனேவுக்கு அனுப்பி வைத்துள்ளோம். ரிசல்ட் வந்தால்தான் தெரியவரும் வீரியம் அடைந்த கொரோனாவா அல்லது சாதாரண கொரோனாவா? இவ்வாறு அவர் கூறினார்.