ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பரபரப்பு: தியாகி இமானுவேல் சேகரன் சிலை திடீரென அமைத்த பொதுமக்கள்!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திடீரென தியாகி இமானுவேல் சேகரன் சிலை வைத்ததால் ஏற்பட்ட பரபரப்பு.
By : Bharathi Latha
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் அமைச்சியார்புறத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனின் மார்பளவு சிலை இருந்தது. இந்த சிலையை தற்போது அகற்றப்பட்டுள்ளது. மார்பளவு இருந்த சிலையை அகற்றி திடீரென அங்கு முழு உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் மம்சாபுரம் போலீஸ் விரைந்து வந்தனர்.
இதற்கிடையில் சிலையை முடக்க கூடாது என்று கூறி அந்த பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக முழு உருவ சிலை வைத்துள்ள இந்த நாளில் அவருடைய சிலையை அகற்றக் கூடாது என்று கூறி அங்குள்ள கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். சிவகாசி சப் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் ராமசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இன்று தியாகி இமானுவேல் சேகரனின் குருபூஜை முன்னிட்டு அங்கு காலை 10 மணி வரை பொங்கல் வைத்து வழிபட அனுமதி அளிக்கப்படும். பின்னர் சிலை முடக்கப்படும் முறையாக அனுமதி பெற்ற உடன் தொடர்ந்து சிலை திறந்து இருக்கும் என்று அதிகாரிகள் கூறினார்கள். அந்தப் பகுதியில் தற்போது போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். எந்த ஒரு அனுமதியும் பெறாமல் யார்? இந்த முழு உருவ சிலையை அங்கு வைத்தது என்பது தொடர்பான விசாரணையும் தற்போது நடந்து வருகிறது.
Input & Image courtesy: Vikatan News