பா.ஜ.கவில் இணைந்த திருமாவளவன்!
தமிழக காவல்துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்த திருமாவளவன்.
By : Bharathi Latha
முன்பெல்லாம் அரசியல் களம் என்றாலே அதில் வயதானவர்கள் தான் இருப்பார்கள் என்று அதிகமான எண்ணம் மக்களுக்கு இருந்து வந்தது. அந்த நிபந்தனைகளை எல்லாம் தற்போது உடைத்தெறிந்து தமிழகத்தில் வேரூன்றி வருகிற கட்சியாக பாஜக திகழ்ந்து வருகிறது. மக்களுக்கு உண்மையான சேவைகளை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பாஜகவில் நிச்சயம் தன்னை இணைத்துக் கொள்வார்கள் என்று ஏற்கனவே பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருந்தார். இந்த ஒரு சம்பவம் தற்போது நடந்து இருக்கிறது.
கடலூர் மாவட்டதை சேர்ந்த காவலர் விருப்ப ஓய்வு பெற்ற திருமாவளவன் தன்னை அண்ணாமலை முன்பு பா.ஜ.கவில் இணைந்தார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் திருமாவளவன், BE மெக்கானிக்கல் எஞ்சினியரான இவர் கடந்த 2008 ஆம் ஆண்டில் காவல்துறையில் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். காவல்துறையில் 15 ஆண்டுகள் தலைமை காவலராக பணியாற்றி வந்திருக்கிறார். அவர் வசித்து வரும் பகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் அந்த பகுதிக்கு மக்களுக்கு தொடர்ந்து அவர் செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் இளம் வயதில் இருந்து அரசியல் ஆர்வம் இருந்த காரணத்தினால் விருப்ப ஓய்வு பெற்று இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம் கமலாலயத்தில், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். இதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தன்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: News