Kathir News
Begin typing your search above and press return to search.

6 மாதம் சம்பளம் இல்லை: தி.மு.க. அமைச்சர் காலில் விழுந்து கதறிய தூய்மை பணியாளர்கள்!

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனின் காலில் விழுந்து தங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஆரம்ப சுகாதார நிலைய தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் விட்டு கதறிய கொடுமை அரங்கேறியுள்ளது.

6 மாதம் சம்பளம் இல்லை: தி.மு.க. அமைச்சர் காலில் விழுந்து கதறிய தூய்மை பணியாளர்கள்!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 Oct 2021 12:56 PM GMT

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனின் காலில் விழுந்து தங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஆரம்ப சுகாதார நிலைய தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் விட்டு கதறிய கொடுமை அரங்கேறியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், கொடிக்கால் பாளையத்தில் அமைந்துள்ள அரசு நகர்ப்புற மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்ரமணியம் வந்துள்ளார். அப்போது தூய்மைப் பணியாளர் தங்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பவளம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், தங்கள் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அமைச்சர் மா.சுப்ரமணியம் காலில் விழுந்து கண்ணீர் விட்டு மனு அளித்த சம்பவம் காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக கணவனை இழந்த கைம்பெண்கள் 20 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு பணியாளர் பணி வழங்கப்பட்டது. 500 ரூபாய் சம்பளத்தில் இவர்கள் சேர்ந்தபோது தற்போது 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர். உடனடியாக திமுக அரசு இதுப்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். திமுக ஆட்சியை நம்பிய பொதுமக்களும் சரி, அரசு ஊழியர்களும் சரி எதையும் தற்போது எதிர்பார்க்க முடியாத சூழ்நிலையே நிலவுகிறது.

Source, Image Courtesy: Puthiyathalamurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News