Kathir News
Begin typing your search above and press return to search.

BLACK SHEEP யூடியூப் சேனல் முறைகேட்டில் ஈடுபட்டதா? அலறிக்கொண்டு அறிக்கை விட்ட நிறுவனம்.!

BLACK SHEEP யூடியூப் சேனல் முறைகேட்டில் ஈடுபட்டதா? அலறிக்கொண்டு அறிக்கை விட்ட நிறுவனம்.!

BLACK SHEEP யூடியூப் சேனல் முறைகேட்டில் ஈடுபட்டதா? அலறிக்கொண்டு அறிக்கை விட்ட நிறுவனம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Nov 2020 4:00 PM GMT

BLACK SHEEP என்ற யூடியூப் சேனல் தமிழில் செயல்பட்டு வருகிறது. இந்த சேனலில் கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்துவிட்டு அதற் பதிலாக பொருட்களை வழங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.


இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து BLACK SHEEP யூடியூப் சேனல் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று முதல் இணைய வெளியில் BLACK SHEEP நிறுவனத்தின் நம்பகத்தன்மை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கான விளக்கத்தை BLACK SHEEP குடும்பம், அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த அறிக்கையின் நோக்கம்.


கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் BEE SHOPEE எனும் இணையதள விற்பனை தளம் விளம்பரத்திற்காக எங்களது யூடியூப் சேனலை அணுகியது. நாங்களும் விளம்பரம் செய்தோம். ஆனால், ஒரு சில நாட்களில், அந்த நிறுவனம் பணம் பெற்றுக்கொண்டு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு தரவில்லை என்பதை நமது சப்ஸ்கிரைப் வாடிக்கையாளர்கள் BLACK SHEEP அலுவலகத்தில் அளித்த புகாரில் மூலமாக தெரிந்து கொண்டோம். அந்த புகாரின் மீதான நடவடிக்கையாக, உடனடியாக அந்த நிறுவனத்தின் விளம்பரத்தை எங்களது வீடியோவில் இருந்து நீக்கவும் செய்தோம்.


இப்பொழுதும் அந்த நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் காவல் துறையில் புகார் அளிப்பதோ அல்லது அந்த நிறுவனத்தின் மீது எந்த விதமான நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் BLACK SHEEP அதற்கு துணை நிற்கும். இதுவரை இப்படி நாங்கள் நேரடி பார்வைக்கு வந்த புகார்களுக்கு இந்த பதில்களை சொல்லிக்கொண்டேதான் இருக்கிறோம். இதில் மௌனம் சாதிக்க வேண்டிய அவசியமே இல்லை.


ஆனால்.. இது நடந்து ஓராண்டு கழித்து இந்த செய்தி BLACK SHEEPபின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பரப்பப்படுவதன் பின்னணியில் இருக்கும் உள்நோக்கம் உண்மையாகவே பிளாக்ஷிப் குடும்பத்திற்கு வருத்தம் அளிக்கிறது.


இன்னமும் நேரடியாக சொல்கிறோம்.. இந்த குற்றச்சாட்டை பரப்பும் யாரேனும் ஒருவர் பிளாக்ஷிப் நிறுவனத்திற்கும் BEE SHOPEE நிறுவனத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருப்பதாக ஆதாரம் இருப்பின் அதை இதே இணையத்தில் வெளியிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


BLACK SHEEP எப்பொழுதும் தனிப்பட்ட வெற்றிகளை தாண்டி தமிழ் டிஜிட்டல் உலகம் அடுத்த கட்டம் செல்ல வேண்டும் என நேர்மையாக உழைத்து வந்திருக்கிறோம். அந்த முயற்சியை இப்போதும் தொடர்ந்து செய்து வருகிறோம்.


இருந்தபோதும் எந்த விதமான ஆதாரமும் இன்றி இப்படி ஒரு குற்றச்சாட்டை பிளாக்ஷிப் குடும்பத்தின் மேல் வைப்பதும் அதன் அடிப்படையைக் கூட ஆராயாமல் அதை சிலர் ஷேர் செய்வதும் உண்மையான உழைப்பை மட்டுமே அடித்தளமாக வைத்து வளரும் BLACK SHEEP குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் மிகப்பெரிய மன வலியை தருகிறது என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்.


இப்பொழுதும் கூட இந்த செய்தியை போஸ்டாக, MEEMமாக மாற்றிய எமது அன்புத் தம்பிகள், பிசாப்பி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்த வாடிக்கையாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இதை செய்ததாகவே பிளாக்ஷாப்பி நம்புகிறது. ஆனால் மீம்களை உருவாக்கும் முன்னர் இந்த குற்றச்சாட்டில் உண்மையாகவே BLACK SHEEP நிறுவனத்திற்கு சம்பந்தம் இருக்கிறதா என கொஞ்சம் ஆராய்ந்து இருந்திருக்கலாம் என்பதே BLACK SHEEP எனும் நிறுவனத்தில், கனவுகளோடு உழைத்துக் கொண்டிருக்கும், உங்களைப் போன்ற ஒவ்வொரு எளிய கலைஞனின் எதிர்பார்ப்பும்..


யாரும் யார் மீது வேண்டுமானாலும் சந்தேகம் எழுப்பலாம்.. அதை முன்னெடுத்து வைக்கும்போது ஒரே ஒரு ஆதாரத்தையேனும் பெற்று குற்றம்சாட்டி இருக்கலாமே என்கிற ஒரு வருத்தம்.. நீங்கள் இதை, எங்களிடம் விளக்கம் பெறுவதற்கே செய்திருக்கலாம் நண்பர்களே! ஆனால், உங்களைத் தொடர்ந்து, இதை பரப்புபவர்கள், மாப்பிள்ளை சொம்பு கேட்ட கதையாக இதைத் திரிப்பதிலும், ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்டு செய்வதிலும், இதுவரை காட்ட முடியாத காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என முழுமையாக நம்புகிறோம்.


200 பிளஸ் இளைஞர்களைக் கொண்டு, ஒரு இணைய ஊடகத்தை உருவாக்கி நிலைநிறுத்த நாங்கள் இன்றளவும், சந்திக்கும் இடர்களையும், வலிகளையும் உங்கள் நம்பிக்கையும், ஆதரவும் மட்டும் கொண்டே, கடந்து தொடர்ந்து பயணிக்கிறோம்.. இனியும் இந்தப் பயணம் இனிதே தொடரும்.. உங்கள் பேரன்பிற்கு நன்றி என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News