Kathir News
Begin typing your search above and press return to search.

வீரப்பனுக்கு நாங்கதான் ஆயுதம் கடத்தினோம்: போலீசாரை அலறவிட்ட போதை ஆசாமிகள்.!

கோவையில், குடிபோதையில் வந்த 2 பேர் வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியதே நாங்கதான் என்று அலறவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரப்பனுக்கு நாங்கதான் ஆயுதம் கடத்தினோம்: போலீசாரை அலறவிட்ட போதை ஆசாமிகள்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  6 July 2021 2:18 PM IST

கோவையில், குடிபோதையில் வந்த 2 பேர் வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியதே நாங்கதான் என்று அலறவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, கருமத்தம்பட்டியைச் சேர்ந்த இரண்டு பேர் குடிபோதையில் சாலையில் செல்பவர்களிடம் தகராறு செய்து வந்தனர். இதனை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது உரிய பதில் அளிக்காமல் உளறிக்கொண்டிருந்தனர். மேலும், போலீசாரை அலறவிட்டு பேசிய சம்பவம்தான் ஹைலட்டாக உள்ளது.

அப்போது குடிபோதை ஆசாமி ஒருவர், வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியதே நாங்கதான் என்று கூறினார். இதன் பின்னர் போலீசார் ஆம்புலன்ஸ் வரவழைத்து இரண்டு பேரையும் போதை தெளிய வைக்கும் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News