கோவை: மாநகராட்சி பள்ளியில் பேண்ட் வாத்தியம் இசையுடன் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!
கடந்த ஒன்னரை வருடமாக பள்ளிகள் அனைத்து மூடப்பட்டிருந்த நிலையில், இன்று (நவம்பர் 1) முதல் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. புதிதாக பள்ளிக்கு வரும் மாணவர்களை இனிப்புகள் மற்றும் மலர்கள், பலூன்கள் உள்ளிட்டவைகளை கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்று வருகின்றனர்.
By : Thangavelu

அந்த வகையில், கோவை மாநகராட்சி பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். கோவை மாவட்டத்தில் 2064 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5.70 லட்சம் மாணவர்கள் இன்று பள்ளிகளுக்கு வருவதால் அதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகங்கள் செய்திருந்தது.
இந்நிலையில், கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பேண்ட் வாத்தியம் முழங்க மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். கடந்த ஒன்னரை வருடமாக வீட்டில் அடைப்பட்டிருந்த மாணவர்கள் தற்போது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்திக்கின்ற வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu