Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்கா, ஜப்பானே அனுமதிக்கும் போது ராஜஸ்தானுக்கு என்ன - பட்டாசு தயாரிப்பாளர்கள் குமுறல்.!

அமெரிக்கா, ஜப்பானே அனுமதிக்கும் போது ராஜஸ்தானுக்கு என்ன - பட்டாசு தயாரிப்பாளர்கள் குமுறல்.!

அமெரிக்கா, ஜப்பானே அனுமதிக்கும் போது ராஜஸ்தானுக்கு என்ன - பட்டாசு தயாரிப்பாளர்கள் குமுறல்.!
X

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  7 Nov 2020 9:26 AM GMT

ஒவ்வொரு மாநிலமாக கொரோனா சூழலை காரணம் காட்டி பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து வருவது சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம் தன்னிச்சையாக பட்டாசு வெடிக்க தடை விதித்ததைத் தொடர்ந்து மேற்கு வங்கம், டெல்லி, ஒடிசா என வரிசையாக பிற மாநிலங்களும் பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கக் தொடங்கி உள்ளன. கர்நாடகாவும் இந்த வரிசையில் சேர்ந்த நிலையில் இந்துக்களின் கடும் எதிர்ப்புக்குப் பின் முதலமைச்சர் எட்டியூரப்பா தடையை நீக்கி உத்தரவிட்டார்.

வரும் முழுவதும் தீபாவளி‌ சமயத்தில் நடக்கும் வியாபாரத்துக்காகவே பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறு, குறு, முக்கியமாக குடிசைத் தொழிலுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தடை விதித்துள்ள‌ மாநிலங்களை தடையை நீக்க அறிவுறுத்துவார் என்று பட்டாசு தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பிரதமரிடம் இது தொடர்பாக பட்டாசுத் தயாரிப்புகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே முதல்வர் பழனிச்சாமியும் ஒடிசா, ராஜஸ்தான் மாநில முதல்வர்களுக்கு தடையை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

எனினும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் முக்கியமான அறிகுறி மூச்சுத் திணறல் என்பதால் பட்டாசு புகை பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சத்தில் பிற மாநிலங்களும் தடை விதிப்பது பற்றி ஆலோசித்து வருவதாக அஞ்சப்படுகிறது. இந்த மாநிலங்கள் சில வாரங்களுக்கு முன்பு தான் விற்பனையாளர்களுக்கு பட்டாசு விற்க உரிமம் வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கையில்‌ தற்போது திடீரென்று தடை விதிக்க என்ன காரணமாக இருக்கும் என்று பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் ஜப்பான், அமெரிக்கா ஆகிய‌ நாடுகளே கொரோனா தொற்று உச்சத்தை எட்டிப் கொண்டிருந்த சமயத்தில் கூட பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட தடை விதிக்கவில்லை எனும் போது, இந்தியாவில் தற்போது தொற்று குறைந்து வரும் சூழலில்‌ தடை விதிப்பது ஏன் என்று தயாரிப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். வளர்ந்த நாடுகளுக்கு கொரோனா சூழலில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்பு பற்றி தெரியாதா என்ன? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

இப்படி தீபாவளிக்கு ஒரு வாரமே இருக்கும் போது தடை விதிப்பதால் பொருளாதார ரீதியாக பல தரப்பினருக்கும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பொதுவாக ஆர்டர்களுக்கு முன்பணமாக வழங்கப்படும் தொகை மற்றும் வங்கிக் கடனை மூலதனமாகக் கொண்டு‌ தான் உற்பத்தி தொடங்கப்படுகிறது. ஆனால் விநியோகம் என்று வரும் போது 90%க்கும் மேல் கடனுக்கு வழங்கி தீபாவளி விற்பனை முடிந்த பின் தொகையை வசூலித்துக் கொள்வது தான் வழக்கம்.

ஏற்கனவே ஊரடங்கால் ஏறக்குறைய 30% இழப்பு ஏற்பட்ட நிலையில் தீபாவளி சமயத்தில் 2000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபடும் பட்டாசுத் தொழில் 1,400 கோடி‌ ரூயாபாகக் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதிலும் 90% சந்தை வட இந்திய மாநிலங்களே என்பதால் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் கடைசி நேரத்தில் தடை விதிப்பது 50% பட்டாசுகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும் சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தி உள்ளதாக பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

உரிமம் கொடுத்த மாநில அரசுகளை நம்பி கடன் வாங்கி பட்டாசு விற்பனையில் ஈடுபடும் விற்பனையாளர்களுக்கும் இது பேரிடியாக அமைந்துள்ளது. பெரும்பாலானோர் சிறு, குறு தொழில் மற்றும் முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெற்றவர்கள் என்பதால் வங்கிகளுக்கும் இது சுமையை ஏற்படுத்த உள்ளது. இந்த சங்கிலித் தொடர் பொருளாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு தடையை நீக்க ஆவண செய்ய வேண்டும் என்பதே பட்டாசு தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News