கோவை மக்கள் தங்களின் குறைகளை ஆட்சியரிடம் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்.!
ஒரே இடத்தில் மக்கள் அதிகமாக கூடுவதால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் நேரடியாக மக்கள் ஆட்சியர் அலுவலகம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

By : Thangavelu
கோவையில், பொதுமக்கள் தங்களின் குறைகளை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கும் விதமாக வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களை, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகின்ற குறைதீர்ப்பு கூட்டங்களில் பங்கேற்று தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனுக்களை அளிப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
ஒரே இடத்தில் மக்கள் அதிகமாக கூடுவதால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் நேரடியாக மக்கள் ஆட்சியர் அலுவலகம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கின்ற வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வாட்ஸ்அப் எண் மூலமாக புகரா தெரிவிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி புகார் அளிக்க விரும்பும் மக்கள், 94875 70159 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாக தங்களின் புகார் மனுக்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
