மெரினாவில் எப்போது மக்களை அனுமதிப்பது? தமிழக அரசு விளக்கம்.!
மெரினாவில் எப்போது மக்களை அனுமதிப்பது? தமிழக அரசு விளக்கம்.!
By : Kathir Webdesk
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட மார்ச் மாதம் முதல் தற்போது வரை பொதுமக்கள் யாரையும் மெரினா கடற்கரையில் அனுமதிப்பதில்லை. இன்னும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதை பார்க்க முடிகிறது.
தமிழகத்தில் பல கட்டங்களாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. பல சுற்றுலா தளங்களில் பொதுமக்களை கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்ப்பட்டுள்ளனர். ஆசியாவிலேயே பெரிய கடற்கரையான மெரினாவில் இன்னமும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்காமல் அரசு காத்து வருகிறது.
இந்நிலையில், மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மெரினாவில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாக மீனவர்கள் நலன் அமைப்பை சேர்ந்த பீட்டர் ராயன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிமன்றம், உரிய முடிவு அறிவிக்காவிட்டால் நீதிமன்றமே மெரினாவை மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க நேரிடும் என தெரிவித்துள்ளது.
இதனால் அரசுக்கு மிகவும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. ஒரு புறத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை போட்டு வருகின்றது. ஆனாலும் சிலர் நீதிமன்றத்தில் முறையிடு வழக்கமாகி விடுகிறது. மக்களின் நலனுக்காகத்தான் மெரினாவை திறக்காமல் வைத்துள்ளது என்பது அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு சாமானியனின் கடமை என்றும் கூறலாம்.