கன்னியாகுமரி, பாம்பன் இடையே புயல் எப்போது கரையை கடக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!
கன்னியாகுமரி, பாம்பன் இடையே புயல் எப்போது கரையை கடக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.
இது புரெவி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும், நாளை மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். சில நேரங்களில் 95 கிலோ மீட்டர் வரைக்கும் வீசலாம் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலால் தென்தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும்.
திரிகோணமலை அருகே கரையை கடக்கும் புயல் உடனடியாக மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா நோக்கி நகர்ந்து அருகில் உள்ள கன்னியாகுமரி பகுதிக்கு 3ம் தேதி நகர்கிறது. பின்பு மேற்கு- தென்மேற்கு அருகில் நகர்ந்து டிசம்பர் 3ம் தேதி கன்னியாகுமரிக்கும் -பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் எனத் இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகள் மற்றும் குடிசைகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.