தினமும் பல லட்சம் ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து வாதாட நளினிக்கு எங்கிருந்து பணம் வந்தது? - அனுசுயா கேள்வி
'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைகள் முதல் குற்றவாளி நளினியை நான்தான் அடையாளம் காட்டினேன்' என முன்னாள் போலீஸ் அதிகாரி அனுசுயா தெரிவித்துள்ளார்.

By : Mohan Raj
'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைகள் முதல் குற்றவாளி நளினியை நான்தான் அடையாளம் காட்டினேன்' என முன்னாள் போலீஸ் அதிகாரி அனுசுயா தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று அவர் அளித்த பேட்டிகள், ராஜுவ் காந்தி கொலை வழக்கில் முதல் குற்றவாளி நளினி உச்ச நீதிமன்றத்தால் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.
ராஜூவ் கொலை நடந்த இடத்தில் நான் நளினியை பார்த்தேன், அதன் அடிப்படையில் நளினியை நான் தான் முதலில் குற்றவாளியாக அடையாளம் காட்டினேன். நான் அடையாளம் காட்டியதால் மட்டுமே நானே மரண தண்டனை விதிக்கப்படவில்லை மொத்தம் 1444 சாட்சியங்களை விசாரித்து ஆவணங்கள் அடிப்படையில் நளினி உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
பொதுக்கூட்ட இடத்தில்தான் நான் இல்லை இந்திரா சிலை அருகில் இருந்ததாக நளினி கூறியுள்ளார் இரவு 10:20 மணிக்கு வெளியூர் நபரான நளினிக்கு இந்திரா சிலை அருகில் என்ன வேலை ராஜுவ் பொதுக்கூட்டம் மைதானத்தில் நளினையும், சுபாவம் ஓட வசதியாக அமர்ந்திருக்கும் படம் பத்திரிகைகளின் வெளியானது. அந்த ஆதாரம் என்னிடம் உள்ளது மனித வெடிகுண்டு நடந்த அன்று மாலை 6 மணிக்கு நழுவியை பொதுக்கூட்டம் மேடை அருகே பார்த்தேன். நளினி உதவி செய்யாமல் இருந்திருந்தால் ராஜீவும் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 16 பேரும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.
தினமும் பல லட்சம் ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து வாதாட நளினிக்கு எங்கிருந்து பணம் வந்தது? 36 ஆண்டுகளாக போராட ராஜிவ் கொலை செய்தவர்களுக்கு உதவி செய்தது யார்? நளினியை குற்றவாளி அல்ல எனக்கொரு உச்சநீதிமன்றம் விடுதலை செய்யவில்லை கருணை அடிப்படையில் தான் விடுதலை செய்துள்ளது' என காவல்துறை அதிகாரி அனுசியா கூறினார்.
