மனைவி கொலை.. மனஉளைச்சலில் இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை.. மதுரையில் பயங்கரம்.!
மனைவி கொலை.. மனஉளைச்சலில் இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை.. மதுரையில் பயங்கரம்.!
By : Kathir Webdesk
லஞ்சம் வாங்கிய வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் வடுகப்பட்டி பகுதியில் வசித்து வந்த பெருமாள்பாண்டி, மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அரசு மருத்துவர் ஒருவரை விடுவிப்பதற்காக, கடந்த 2010ம் ஆண்டு லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய மதுரை லஞ்ச ஒழிப்புதுறை நீதிமன்றம், பெருமாள்பாண்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.இதனைதொடர்ந்து பெருமாள்பாண்டி, ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள தனது வீட்டில் பெருமாள்பாண்டி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவியும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், ஜாமீனில் வெளியே வந்த பெருமாள்பாண்டி மனைவி உமா மீனாட்சியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது சண்டையாக மாறியுள்ளது. பின்னர் பெருமாள்பாண்டியை மனைவியை தாக்கியுள்ளார். இதில் அவர் இறந்து போயுள்ளார்.
இதனால் மனைவி கொலை செய்துவிட்டோம் என்ற மன உளைச்சலில் தானும் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த சச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மத்தியிலும் ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நல்லா இருக்க வேண்டிய குடும்பம் இப்படி இறந்து விட்டனரே என்று அனைவரும் பேசிக்கொள்வதை காண முடிகிறது.