சென்னை விமான நிலையம்... அரிய வன விலங்குகளை வெளிநாட்டு கொண்டு செல்ல சதி...
சென்னை விமான நிலையத்தில் கடத்திச் செல்ல முயன்ற வன உயிரினங்களை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.
By : Bharathi Latha
இந்தியாவில் இருந்து பல்வேறு பொருட்கள் வெளிநாட்டிற்கு சுங்கத்துறை அதிகாரிகளின் ஒப்புதல் இன்றி எடுத்து செல்லப்படுகிறத. அதுவும் குறிப்பாக வனவிலங்குகள் அதிகமாக வெளிநாட்டுக்கு விற்கப்படுகிறது. இதற்குப் பின்னால் ஒரு மார்க்கெட்டை இயங்குகிறது. சென்னை விமான நிலையத்தில் உளவுத்துறையின் தகவலின் படி, ஏப்ரல் 28- ஆம் தேதி அன்று ஏர் ஏசியா விமானத்தில் கோலாலம்பூருக்குச் செல்ல வந்த பெண் தனது பையில் 23 வனவிலங்குகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அவற்றை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதைபோல் 27 ஆம் தேதி அன்று ஏர் ஏசியா விமானம் மூலம் கோலாம்பூரில் இருந்து வந்த பயணி ஒருவரை சோதனை செய்த போது 177 கிராம் எடையுள்ள 20 மஞ்சள் நிற உலோகத் தகடுகள் மற்றும் 88 கிராம் எடையுள்ள தங்கம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இத்தனையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மொத்தம், 23 எண்ணிக்கையிலான வனவிலங்குகள், 177 கிராம் எடையுள்ள 20 மஞ்சள் நிற உலோகத் தகடுகள் மற்றும் 88 கிராம் எடையுள்ள இரண்டு தங்கம் சுங்கச் சட்டம், 1962ன் கீழ் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Input & Image courtesy: News