அம்மா வயதுடைய சசிகலாவை அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்த உதயநிதியை துர்கா கண்டிப்பாரா.? வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!
அம்மா வயதுடைய சசிகலாவை அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்த உதயநிதியை துர்கா கண்டிப்பாரா.? வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

பெண்களைப் பற்றி ஆபாசமாக இழிவுபடுத்திப் பேசுவது தி.மு.கவினரின் வழக்கம். இந்த நற்பெயரைச் காப்பாற்றும் வகையில் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சசிகலாவைப் பற்றி கீழ்த்தரமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.
The return to the days of DMK's trademark Vulgarity, TN doesn't deserve people like .@rajinikanth pic.twitter.com/pS8ygfhwzt
— Vishwatma 🇮🇳 (@HLKodo) January 6, 2021
டி.என்.அனந்தநாயகி "இப்போது திராவிட நாடு எங்கே இருக்கிறது?" என்று எழுப்பிய கேள்விக்கு "நாடாவை அவிழ்த்தால் தெரியும்" என்று ஆபாசமாக பதிலளித்த தாத்தா கலைஞர் கருணாநிதியைப் போன்றே அவரது பேரன் உதயநிதியுடன், அம்மா வயதில் இருக்கும் சசிகலாவை இவ்வாறு பேசியது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் கூட என்று அவர் தெரிவித்துள்ளார்.
அறிவாலயத்தின் சிந்திக்கும் பாரம்பரியமே பெண்களைக் கேவலப்படுத்துவதாகத் தான் இருக்கிறது என்று குறிப்பிட்ட வானதி சீனிவாசன், தலைவர்கள் முன்னெடுப்பதை தொண்டர்களும் பின்தொடர்ந்து பூங்கோதை ஆலடி அருணாவை காலில் விழ வைத்து தற்கொலை முடிவு எடுக்கத் தூண்டிய நிகழ்வைக் குறிப்பிட்டு பெண்களை அவமானப்படுத்துவதை சாதாரணமாக கடந்து போவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
தன் அம்மா வயதிலிருக்கும்
— Vanathi Srinivasan (@VanathiBJP) January 7, 2021
சசிகலாவை @Udhaystalin விமர்சனம் செய்கின்ற விதம்
அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, கண்டிக்கப்படவேண்டியது.
இதை @mkstalin அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
Smt. துர்கா ஸ்டாலின் அவர்களே!
செய்வீர்களா?(3).
இத்தகைய செயல்பாடு "பெண்களை அரசியலுக்கு வரவிடாமல்
இம்மாதிரி விமர்சனங்கள் வாயிலாக இரும்பு அரணை" எழுப்புவதாக இருக்கிறது என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் எந்த கண்டிப்பையும் எதிர்பார்க்க முடியாது என்று கூறியுள்ள வானதி சீனிவாசன், "திருமதி.துர்கா ஸ்டாலின் அவர்களே! செய்வீர்களா.?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இடுப்பு கிள்ளி தி.மு.க என்று பெயர் எடுக்கும் அளவுக்கு சக தி.மு.க பெண் நிர்வாகிகளை போகப் பொருளாக நடத்தும் தி.மு.கவில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் இப்படி நடந்து கொள்வது அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.