காங்கிரஸின் ஜல்லிக்கட்டிற்கு தடை, வெளிநாட்டிலிருந்து வரும் ராகுல் தனிமப்படுத்திக்கொள்வாரா? வெளுத்து வாங்கும் SG சூர்யா!
காங்கிரஸின் ஜல்லிக்கட்டிற்கு தடை, வெளிநாட்டிலிருந்து வரும் ராகுல் தனிமப்படுத்திக்கொள்வாரா? வெளுத்து வாங்கும் SG சூர்யா!
By : Kathir Webdesk
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை ஜனவரி 14-ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தந்து, பொங்கல் பண்டிகையின் போது மதுரைக்கு அருகிலுள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வைக் காணவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக வயநாடு எம்.பி.யின் தமிழக வருகை அமைந்துள்ளது.
தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு மீதான தடையை கொண்டுவருவதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகித்ததால் ராகுல் காந்தியின் வருகையை பலர் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். காங்கிரஸ் தனது 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க அறிவித்ததாக பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ராகுல் காந்தி தனது இத்தாலி பயணத்திற்குப் பிறகு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாரா என்று அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் SG சூர்யா தனது கீச்சுகளில், ராகுல் காந்தியின் தமிழக வருகையை கடுமையாக விமர்சித்துள்ளார். பண்டைய தமிழர்களின் பாரம்பரியத்தை தடை செய்வதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இருந்தது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
So @RahulGandhi whose #Congress party that actively ensured #Jallikkattu ban & again reiterated the same in 2016 Tamil Nadu election now wants to come & witness the sport. What a shame?? Shouldn’t the protestors shoo him away for his party’s treachery to #Tamils & #TamilNadu ?? pic.twitter.com/EnqJBAgUNo
— SG Suryah (@SuryahSG) January 12, 2021
காங்கிரஸ் தலைவர், தனது இத்தாலி பயணத்திலிருந்து இன்னும் திரும்பவில்லை என்று கூறப்படும் நிலையில், அவர் 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தளுக்கு ஆளாகாமல் மக்கள் கூட்டங்களில் பங்கேற்க நேரடியாக தமிழகத்திற்கு வருவது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அவர் எங்கிருந்து வருகிறார்? அந்த நாடு மரபணு மாறிய புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதா? யாருக்கும் எதுவும் தெரியாது. எவ்வளவு குழப்பத்தை காங்கிரஸ் கட்சி உருவாக்கும்?" என்று பா.ஜ.க தலைவர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi is not even in India yet. How can he straightaway come & attend #Jallikkattu this week in Tamil Nadu without following mandatory quarantine? From where is he coming? Whether that country is infected with UK mutant? Nobody knows anything. Such a mess-up @INCTamilNadu! https://t.co/ufwiazzHlh
— SG Suryah (@SuryahSG) January 12, 2021
ஜல்லிக்கட்டு குறித்த காங்கிரஸ் கட்சியின் நிலைபாட்டை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார் SG சூர்யா. 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்போவதாக அந்த கட்சி அறிவித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏப்ரல் 27, 2016 டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தி அறிக்கையின் படி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்போவதாக 2016 தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது. ஜீ நியூஸும் அதே தேதியில் ANI செய்தியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டை முற்றிலும் தடை செய்வதாக கட்சி உறுதியளித்துள்ளது என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப் போவதாக காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், தி நியூஸ் மினிட் செய்தி ஒன்றில், 2016 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டை சட்டபூர்வமாக அமல்படுத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
SG சூர்யாவின் ட்வீட்டிற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, "காங்கிரஸ் கட்சி தனது அறிக்கையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதாகக் கூறியுள்ளது", என்று ட்வீட் செய்தது. இதற்கு விரைவாக பதிலடி கொடுத்த பா.ஜ.க தலைவர், காங்கிரஸ் கட்சியின் உண்மையான தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டினார்.
Dear @INCTamilNadu,
— SG Suryah (@SuryahSG) January 12, 2021
Why sharing a fake document from Official Twitter handle just like your Leaders??
I've attached the *ACTUAL* Page.72 of your TN 2016 Manifesto. Your's is *FAKE*.
Also Media Reports Here:
ToI - https://t.co/zockAOMxep
India Today - https://t.co/OrXCpl3D30 https://t.co/wv2NxClMSY pic.twitter.com/2B9KapcMVp
ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசிய பல்வேறு நிகழ்வுகளையும் பா.ஜ.க தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது காங்கிரஸ் கட்சி தற்போது கூறுவதற்கு முற்றிலும் முரணாக உள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், Humane Society International என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில், "நான் ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவு அளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் கொண்டு வந்த தீர்ப்பை முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வரவேற்றார். உண்மையில், சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த காலத்தில் தான், ‘செயல்திறன்’ தடைசெய்யப்பட்ட விலங்குகளின் பட்டியலில் காளையைச் சேர்ப்பதன் மூலம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சஷி தரூர், ஜல்லிக்கட்டை கொடூரமான விளையாட்டு என்று 2015-ஆம் ஆண்டு கூறியிருந்தார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாடு குறித்து இணையவாசிகள் பதிவிட்டுட்டு வருகின்றனர்.
Pic 1 - In 2016 Manifesto Congress supported ban on Jallikattu
— PoliticsSolitics (@IamPolSol) January 13, 2021
Pic 2 - Now, in 2021 Rahul Gandhi is going to watch #Jallikattu, as usual Vote Bank Politics
Congress, your double standards are out in open, you can't make fool of public now.#GoBackRahul #Goback_Rahul pic.twitter.com/Z4QV65g532
Congress Govt banned Jallikkattu, terming it a barbaric sport!
— Ethirajan Srinivasan (@Ethirajans) January 13, 2021
Now Rahul Gandhi is coming to witness Avaniyapuram Jallikkattu!
Height of hypocrisy!