Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்பூர், சிதிலமடைந்த நிலையில் கொங்குனீசுவரர் கோயில் - கண்டுகொள்ளுமா அறநிலையத்துறை?

திருப்பூர், சிதிலமடைந்த நிலையில் கொங்குனீசுவரர் கோயில் - கண்டுகொள்ளுமா அறநிலையத்துறை?

ThangaveluBy : Thangavelu

  |  28 April 2022 1:30 PM GMT

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குள் அருகே உள்ள கடத்தூர். அங்கு கொங்குனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் சிவன் எழுந்தருளி இருப்பதனை குறிக்கும் வகையில் கொங்கு என்கின்ற அடைமொழியோடு இக்கோயில் அமைந்திருக்கும்.

இக்கோயில் ஆனது முழுவதும் கருங்கற்களை மட்டுமே வைத்து 10ம் நூற்றாண்டில் கட்டியுள்ளனர். பல நூறு ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் வைத்ததான் காரணமாக தற்போது மேற்கூரை, சுற்றுச்சுவர் கோயில் உள்பகுதி என்று அனைத்து இடங்களிலும் சிதிலமடைந்திருக்கிறது.

மேலும், கோயில் வளாகத்தில் முட்புதர்கள் வளர்ந்து பக்தர்கள் செல்ல முடியாத நிலையே உள்ளது. இது தொடர்பாக பக்தர்கள் கூறும்போது, ''சுரங்கப்பாதை இருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். அதாவது இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அர்ச்சுவனேஸ்வரர் கோயில் கருவறை முதல் இக்கோயில் வரை சுரங்கப்பாதை அந்த காலத்தில் வெட்டியுள்ளனர். இரண்டு கோயில்களுக்கும் பக்தர்கள் சென்று வருவதற்கும் இவை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி கோயில்களின் தகவல்களை தெரிந்து கொள்வதற்காக பல்வேறு கல்வெட்டுகளும் பொறிக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்புமிக்க கோயில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே கோயிலை உடனடியாக அறநிலையத்துறை சீரமைத்து கொடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source, Image Courtesy: Malaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News