தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தலா.? தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி.!
தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தலா.? தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி.!

தமிழக சட்டமன்றத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. பல பெரிய கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது.
இதனிடையே பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் போன்று தமிழகத்திலும் பின்பற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், அங்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டதை போன்று இங்கு 2 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனை தேர்தல் ஆணையம் இதனை பரிசீலனை செய்து வருவதாகவும் சொல்லப்பட்டது.
அண்மையில் சென்னை வந்த இந்திய தேர்தல் ஆணையக் குழுவும் இது பற்றி பிரதான கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய போது, திமுக 2 கட்டமாக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. இந்நிலையில், இது பற்றி தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த பரிந்துரைக்கவில்லை என்றும் இதுவரை நடந்த எல்லா தேர்தல்களும் ஒரே கட்டமாக நடந்ததால் இந்த முறையும் 2 கட்டமாக நடத்த எந்த திட்டமும் இல்லை என்றார்.
இதன் மூலம், தமிழகத்தில் ஒரே கட்டமாகவே தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.