குவாட்டர் பாட்டிலில் பாம்பு: கட்டிங் போட்டவர் மருத்துவமனையில் அனுமதி.!
வீட்டில் இருந்தவர்கள் மதுபாட்டிலை பார்த்தபோது மதுபாட்டிலில் ஒரு குட்டிப்பாம்பு ஒன்று இருந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

By : Thangavelu
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது இரும்புலிக்குறிச்சி என்ற கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் சுத்தமல்லியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தற்போது வசித்து வருகின்றார்.
இதனிடையே அப்பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் குவார்ட்டர் பாட்டில் வாங்கி அருந்தியுள்ளார். இதன் பின்னர் மீதியை பிறகு குடிக்கலாம் என்று கூறி வீட்டில் வைத்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் இருந்தவர்கள் மதுபாட்டிலை பார்த்தபோது மதுபாட்டிலில் ஒரு குட்டிப்பாம்பு ஒன்று இருந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இது பற்றி சுரேஷிடம் கூறியபோது, அவர் பதற்றத்தில் மயக்கம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை உடனடியாக ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதி முழுவதும் காட்டுத்தீ போன்று பரவியுள்ளது. இதனை கேள்விப்பட்ட குடிமகன்கள் மிகுந்து அதிர்ச்சியில் உள்ளனர். மது பாட்டிலில் பாம்பு உள்ள வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதனால் மது பிரியர்கள் இந்த வீடியோவை வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
