திரையரங்கில் 100 சதவிகித பார்வையாளர் அனுமதி முடிவு வாபஸ்.? அமைச்சர் பேட்டி.!
திரையரங்கில் 100 சதவிகித பார்வையாளர் அனுமதி முடிவு வாபஸ்.? அமைச்சர் பேட்டி.!

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கில் 100 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிகப்படுவார்கள் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு மருத்துவர்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மூடப்பட்ட அறைகள் மூலமாக கொரோனா வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளது எனவே தமிழக அரசு இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என கோரிக்கையும் வைத்திருந்தனர்.
இதற்கு மத்திய அரசு சார்பில் அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை திரும்ப பெற வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பொது சுகாதார விதிகளில் எந்தவித சமரசமும் செய்துக்கொள்ளப்படாது என கூறியுள்ளார்.
விரைவில் அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.