முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200: எச்சில் துப்பினால் ரூ.500.. சென்னை மாநகராட்சி அதிரடி.!
சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
By : Thangavelu
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் முறையாக கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
அதே போன்று முககவசம் அணியாமல் வெளியில் சென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் அரசு கூறிய விதிகளை பின்பற்றாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து அரசு பிறப்பித்த உத்தரவுகளை கடைப்பிடித்து வந்தால், கொரோனா வைரஸ் தொற்று நம்மை விட்டு விலகிவிடும்.