Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்கா செல்வதற்கு விசா கிடைக்கவில்லை.. மனமுடைந்த பெண் தற்கொலை.!

திருச்சி கே.கே.நகரை சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்கா செல்வதற்கு விசா கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா செல்வதற்கு விசா கிடைக்கவில்லை.. மனமுடைந்த பெண் தற்கொலை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  21 Jun 2021 6:02 PM IST

திருச்சி கே.கே.நகரை சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்கா செல்வதற்கு விசா கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி, கே.கே.நர் தொண்டைமான் காலனியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி நிரக்ஷனா. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கணவன் மனைவி இரண்டு பேரும் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் நிரக்ஷனாவின் விசா காலம் முடிவடைந்தது அவர் தாயகம் திரும்பிவிட்டார். இதன் பின்னர் அமெரிக்கா செல்வதற்காக பல முறை முயற்சி செய்துள்ளார். ஆனால் மீண்டும் விசா கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்ட நிரக்ஷனா, நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News