பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 - பிரதமரின் தாய்மை போற்றுவோம் திட்டத்தின் கீழ் தமிழகம் அடைந்த பயன்!
WOMEN BENEFITTED UNDER PMMVY
By : Kathir Webdesk
மத்திய அரசு உதவியுடன் பிரதமரின் தாய்மை போற்றுவோம் திட்டம் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் அமலாக்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது. மத்திய அல்லது மாநில அரசுகளில் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர் அல்லது இதே போன்ற பயன்களை வேறு ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் பெறுபவர்கள் இந்த திட்டத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 2,58,07,111 பெண்கள் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு மொத்தம் ரூ.9,791.28 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12,86,906 பயனாளிகளுக்கு ரூ.356.56 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பயனாளிகள் எண்ணிக்கை 26,042 ஆகும். இவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.11.37 கோடி.
இது போல குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம், மிஷன் வத்சாலயா திட்டத்தின்கீழ் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களுக்காக மாநில அரசுகளின் தேவைகள் மற்றும் கோரிக்கைப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2019 – 20 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள 229 குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் 13339 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். நடப்பு 2020 – 21 ஆம் ஆண்டில் மேற்சொன்ன 229 இல்லங்களில் 13819 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் புதிதாக பராமரிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை உயரவில்லை.
மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2018-19-ல் ரூ 7895.14 லட்சம் வழங்கப்பட்டு, ரூ 8622.16 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது