கோயில்களில் பெண்கள் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள்: அமைச்சர் சேகர்பாபு.!
தமிழக கோயில்களில் பெண்கள் அர்ச்சகராக விரும்பினால் அவர்களுக்கு பயிற்சி அளித்து வேலையில் அமர்த்தப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இந்து சமய மண்டல ஆணையர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.

By : Thangavelu

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்து சமய அறநிலையத்துறையின் பணிகளை துரிதப்படுத்தி, துறையை புதுப்பொலிவுடன் மாற்றுவதற்கு ஆலோசனை நடத்தினோம். எங்க அரசு பதவியேற்ற பின்னர் வெளிப்படையாக நடந்து வருகிறோம். தமிழில் சில இடங்களில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், 100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். அதிலும் பெண்களையும் அர்ச்சகர் ஆக்கும் திட்டம் இருக்கிறது. அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு விரைவில் பணி வழங்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.