பா.ஜ.கவில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு இருக்கிறது - தேசியக் குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ
பா.ஜ.கவின் பெண்களுக்கு முழு பாதுகாப்பு இருக்கிறது என்று தேசிய தேசிய குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ பேட்டி அளித்து இருக்கிறார்.
By : Bharathi Latha
கோவை மாவட்டம் பா.ஜ.க தலைப்பில் சார்பில் நம்ம ஊரு பொங்கல் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பா.ஜ.க தேசிய குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டு இருந்தார். மேலும் அங்குள்ள பெண்களுடன் சேர்ந்த அவர் பொங்கல் வைத்தார். கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. ஆண்கள், பெண்கள் ஒன்றாக இணைந்து கும்மி அடித்து மகிழ்ந்தார்கள். குறிப்பாக அவர்களுடன் நடிகை குஷ்பூ இணைந்து கும்மியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
அதனை தொடர்ந்து அவர் ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்தார். மேலும் சிறிது தூரம் ரேக்ளா வண்டிகளும் பயணித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொங்கல் பண்டிகை என்பது நம்முடைய பாரம்பரிய பண்டிகை ஆகும். இது வீட்டிலும் குடும்பத்திலும் சந்தோஷம் கொடுக்கக்கூடிய ஒரு பண்டிகை. இந்த பண்டிகை இன்று நான் மக்களுடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடி இருக்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. தமிழக அரசு பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூபாய் ஆயிரம் கொடுப்பது வெற்றிகானது அல்ல. தமிழர் கலாச்சாரத்தை பாதுகாப்போம் தி.மு.க அரசு இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளக் கூடாது.
பா.ஜ.கவில் எல்லா பெண்களும் கட்சியை விட்டுப் போகவில்லை. ஒரு சிலர் போகுதல் பாதுகாப்பு இல்லை என்று கூற முடியாது. பா.ஜ.கவில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது. நானும் கட்சியில் தானே இருக்கிறேன். தற்போது தலைவர் அண்ணாமலை அவர்கள் துணிச்சலாக பல முடிவுகளை எடுத்து வருகிறார். அவற்றை நான் பாராட்டுகிறேன். தமிழகம், தமிழ்நாடு என்று சொல்வதால் எந்த தவறும் இல்லை. நான் மும்பையில் பிறந்திருந்தாலும் 36 ஆண்டுகளாக தமிழகத்தில் தான் வசித்து வருகிறேன் என்று குறிப்பிட்டார்.
Input & Image courtesy: Maalaimalar