மகளிர் சுயஉதவி குழு கடன் தள்ளுபடி? இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு.!
மகளிர் சுயஉதவி குழு கடன் தள்ளுபடி? இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு.!
By : Kathir Webdesk
தமிழக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் கடனைப் போன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கி கடனையும் தள்ளுபடி செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. கூட்டுறவு துறையின் மூலமாக மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றது. அதன் மூலம் பயிர் கடன் நகை கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மகளிர் குழுக்கள் என்பது 20 பெண்கள் சேர்ந்து நடத்தப்படுகிறது. அந்த குழுக்கள் கூட்டுறவு வங்கியில் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். அவர்கள் மாதம் மாதம் சேமிப்பு பணத்தோடு, அசல் பணமும் செலுத்தி வருகின்றனர். இதனிடையே தற்போது பயிர் கடன்களை போன்று மகளிர் குழு கடனும் தள்ளுபடி செய்வதற்கு தமிழக அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனால் வருகின்ற 23ம் தேதி நடைபெறும் இடைக்கால பட்ஜெட்டில் இந்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. அப்படி அறிவித்தால் மகளிர் குழுக்களின் வாக்குகள் அனைத்தும் அதிமுக கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
கிராம புறங்களில் ஒவ்வொரு ஊர்களிலும் 5 மகளிர் குழுக்கள் இயங்கி வருகிறது. அவர்கள் ஒட்டுமொத்தமாக 100 நபர்கள் வரை இருக்கின்றன. அந்த 100 நபர்களின் வீடுகளில் 1000 பேர் வசித்து வருகின்றனர். அனைவரின் வாக்குகள் பெரும்பாலும் அதிமுக கூட்டணிக்கே செல்லும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.