Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையை தூய்மையாக வைக்க தமிழக அரசுக்கு ரூ.1,100 கோடி கடன் வழங்கும் உலக வங்கி!

சென்னை மாநகராட்சியை உலகத்தரம் வாய்ந்த மற்றும் தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துகின்ற வகையில் தமிழக அரசுக்கு ரூ.1,100 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னையை தூய்மையாக வைக்க தமிழக அரசுக்கு ரூ.1,100 கோடி கடன் வழங்கும் உலக வங்கி!

ThangaveluBy : Thangavelu

  |  3 Oct 2021 2:20 AM GMT

சென்னை மாநகராட்சியை உலகத்தரம் வாய்ந்த மற்றும் தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துகின்ற வகையில் தமிழக அரசுக்கு ரூ.1,100 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னை மாநகரத்தை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவதற்கு உலக வங்கி சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு கடன் வழங்கியுள்ளது. அதனுடன் சேர்த்து மேகாலயா மாநிலத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக ரூ.296 கோடி கடன் வழங்க இருக்கிறது.

இதற்காக இந்த வங்கி செயல் இயக்குனர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளது. அதில் ஒப்புதல் அளித்துள்ளதாக உலக வங்கி நிர்வாகம் நேற்று (அக்டோபர் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உலக வங்கி அளிக்கும் கடன் தொகையில் கல்வி நிலையங்கள், சுகாதார சேவை மையங்கள், குடிநீர் சப்ளை, கழிவுநீர் மேலாண்மை, போக்குவரத்து, சுகாதார வசதிகள் மேம்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy:News on Air

Next Story
கதிர் தொகுப்பு
Trending News