மீண்டும் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் அளித்த யாசகர்.!
முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் அளித்த யாசகருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

By : Thangavelu
முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் அளித்த யாசகருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பூல் பாண்டியன் 70, இவர் குடும்பத்தை விட்டு வெளியேறி ஊர் ஊராக சென்று யாசகம் வாழ்க்கை நடத்தி வருகிறார். இதனிடையே தன்னால் முடிந்த பல்வேறு வகையிலான உதவிகளை செய்து வந்துள்ளார். பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் நாற்காலி ஆகியவைகளை வாங்கி கொடுத்துள்ளார்.
இதனிடையே கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் வாட்டி வதைக்கும் கொரோனா தொற்றால் பலர் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். அது போன்றவர்களுக்காக உதவுவதற்காக தான் யாசகம் செய்து சேமித்து வைத்த லட்சக்கணக்கான பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில், மீண்டும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு யாசகம் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். இதனை நாகர்கோவில் தோவாளையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூலம் இந்த 10 ஆயிரத்தை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
