Begin typing your search above and press return to search.
மயிலாடுதுறையில் ராட்சத முதலையுடன் விளையாடும் இளைஞர்கள்.!
மயிலாடுதுரை மாவட்டம், மணல்மேடு அருகே 300 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. இந்த முதலை கொள்ளிடம் ஆற்றில் இருந்து சித்தமல்லி என்ற கிராமத்திற்குள் நுழைந்துள்ளது. இதனை அறிந்த அந்த கிராமத்தினர் முதலையை கயிறு மூலம் கட்டி வைத்தனர்.

By : Thangavelu

இந்நிலையில், முதலையை பார்ப்பதற்காக ஏராளமான கிராம மக்கள் அங்கு குவியத் தொடங்கினர். இதனிடையே அங்கு வந்திருந்த இளைஞர்கள் முதலையுடன் தண்ணீர் ஊற்றி விளையாடினர்.
ஆபத்தை உணராமல் பல மணி நேரம் முதலையுடன் இளைஞர்கள் விளையாடியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினருக்கு தகவல் சொல்லியும் பல மணி நேரமாகியும் வரவில்லை என்று கிராம மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
Next Story