Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்லைன் வகுப்பில் ஆபாச படங்களை அனுப்பிய இளைஞர் கைது.!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் வகுப்பில் ஆபாச படங்களை அனுப்பிய இளைஞர் கைது.!
X

ThangaveluBy : Thangavelu

  |  5 July 2021 11:23 AM IST

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தனியார் பள்ளி ஒன்றில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆன்லைன் வகுப்பின்போது மாணவி ஒருவரின் பெயரில் இளைஞர் இணைந்துள்ளார். அப்போது தனது செல்போன் மூலமாக வகுப்பு நடத்தும் ஆசிரியைகளுக்கும், பாடம் கற்கும் மாணவிகளுக்கும் ஆபாச செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வந்துள்ளார்.


இது பற்றி அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக குரூப்பில் இணைந்திருந்த அந்த செல்போன் எண்ணை உடனடியாக நீக்கியது. இது பற்றி தனியார் பள்ளி நிர்வாகம் கடந்த மாதம் 29-ஆம் தேதி மாவட்ட எஸ்.பி சீனிவாசனிடம் புகார் ஒன்றை கொடுத்தது. புகாரை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் அந்த எண் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி வீராச்சிகுப்பம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மோகன்குமார் 26 என்பவர் எண் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News