Kathir News
Begin typing your search above and press return to search.

சாலை அமைக்க முடியாது என கைவிரித்த தமிழக அரசு - சொந்த செலவில் கிராமத்திற்கு சாலை அமைத்த இளைஞர்!

சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் மறுப்பு தொடர்ந்து சொந்தச் செலவில் கிராமத்திற்கு சாலை அமைத்துள்ளார் இளைஞர் ஒருவர்.

சாலை அமைக்க முடியாது என கைவிரித்த தமிழக அரசு - சொந்த செலவில் கிராமத்திற்கு சாலை அமைத்த இளைஞர்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Aug 2022 8:41 AM GMT

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது தான் வானூர் என்ற பகுதி. இந்த பகுதியில் அருகே உள்ள சிறிய கிராமம் தான் நல்லாவூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் இலட்சுமி ஆகியோரின் மகன்தான் சந்திரசேகர் என்பவர். இவர் தற்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நோய் தொற்று ஏற்பட்ட பின்பு கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தன் கிராமத்திற்கு சென்று வீட்டில் இருந்தபடியே தன் பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கு பெய்த கனமழையின் காரணமாக மிகவும் சேரும் சகதியுமாக இருந்தது.


இதனை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்து உடனே வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று நிலவரத்தை கூறி, தன்னுடைய கிராமத்தில் புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இதற்கு அரசு அதிகாரிகள் தற்போது இதுவும் நிதி இல்லை என்று கூறி இருந்தார்கள். அப்போது அதிகாரிகளிடம் இந்த சாலைக்கு எவ்வளவு செலவாகும்? என்று கேட்டுள்ளார். அதன்பிறகு நானே செலவு செய்து, சாலை அமைத்துக் கொள்கிறேன் என்று கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்று அதிகாரிகள் கூறி உள்ளார்கள்.


அதன்பிறகு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்களிடம் அனுமதி பெற்று தன்னுடைய பணியைத் தொடங்கி உள்ளார். சுமார் 14 அடி அகலமும், 270 மீட்டர் தூரமும் கொண்ட சிமெண்ட் சாலையை அமைத்துள்ளார். இதற்கான மொத்த செலவு 10.50 லட்சம், தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவு செய்துள்ளார். எனவே இவரின் இந்த ஒரு செயலை தற்போது அந்த பகுதிக்கு ஊர் மக்கள் வெகுவாக பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Input & Image courtesy: News 7

Next Story
கதிர் தொகுப்பு
Trending News