Kathir News
Begin typing your search above and press return to search.

'பப்ஜி மதன்' மனைவியை அதிரடியாக கைது செய்த போலீஸ்.!

பப்ஜி விளையாடுவதற்காகவே பிரத்யேகமாக யூடியூப் சேனலை தொடங்கி அதன் மூலம் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு தகாத வார்த்தைகளால் பேசி வந்துள்ளார். இதனால் அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் குவியத் தொடங்கியது.

பப்ஜி மதன் மனைவியை அதிரடியாக கைது செய்த போலீஸ்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 Jun 2021 5:29 PM IST

கடந்த சில நாட்களாக இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வரும் நபர் பப்ஜி மதன். இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் அவர் தற்போது வரை எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை.

இவர் பப்ஜி விளையாடுவதற்காகவே பிரத்யேகமாக யூடியூப் சேனலை தொடங்கி அதன் மூலம் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு தகாத வார்த்தைகளால் பேசி வந்துள்ளார். இதனால் அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் குவியத் தொடங்கியது.

இதன் காரணமாக அவரை வலை வீசி தேடி வரும் நிலையில், யூடியூப் சேனலின் நிர்வாகியான அவரது மனைவி கிருத்திகாவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவரிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது. மதன் வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News