Kathir News
Begin typing your search above and press return to search.

பிரபல யூடியூபர் மாரிதாஸ் கைது: களத்தில் இறங்கிய பா.ஜ.க.வினர்!

பிரபல யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். இவரது கைதுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து அவரது வீட்டின் முன்னர் போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பிரபல யூடியூபர் மாரிதாஸ் கைது: களத்தில் இறங்கிய பா.ஜ.க.வினர்!

ThangaveluBy : Thangavelu

  |  10 Dec 2021 12:30 AM GMT

பிரபல யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். இவரது கைதுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து அவரது வீட்டின் முன்னர் போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தமிழகத்தில் யூடியூபர்களில் மிகவும் பிரபலமானர் மாரிதாஸ். இவர் சமூகத்தில் நடைபெறும் அட்டூழியங்கள் குறித்து வீடியோவாக வெளியிட்டு வந்தார். மேலும், திமுக அரசுகளில் நடைபெறும் குற்றங்களை அவ்வப்போது பதிவிட்டு வந்தார். அதே போன்று ராமதாநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றபோது தாக்கியுள்ளனர். இதனால் அந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாரிதாஸ் வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், கல்லூரி மாணவர் மரணம் குறித்து போலீசார் மற்றும் திமுக அரசுகளில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டியிருந்தார். இதற்காக அவரை கைது செய்ய மதுரை புறநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் மதுரை மாவட்ட பாஜகவினர் மற்றும் மாரிதாஸ் ஆதரவாளர்கள் அவரது வீடு முன்பாக குவிந்து விட்டனர். அப்போது போலீசாருக்கு எதிராக பாஜகவினர் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு இரண்டு தரப்பிற்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் உருவானது. இது குறித்து மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சரவணன் கூறும்போது, மாரிதாஸை போலீசார் அத்துமீறி கைது செய்துள்ளனர். எதற்காக என்று கேட்டால் காரணத்தை தெரியப்படுத்தவில்லை என்றார்.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News