Kathir News
Begin typing your search above and press return to search.

மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

பிரபல அரசியல் விமர்சகரும், யூடியூபருமான மாரிதாஸ் மீதான வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 Dec 2021 8:24 AM GMT

பிரபல அரசியல் விமர்சகரும், யூடியூபருமான மாரிதாஸ் மீதான வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்தார் என்ற புகாரின்பேரில் பிரபல யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் மற்றொரு வழக்கில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி மாரிதாஸ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 14) யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் விரைவில் விடுதலை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

Source: Maalaimalar

Image Courtesy:Twiter


Next Story
கதிர் தொகுப்பு
Trending News