Kathir News
Begin typing your search above and press return to search.

உதயநிதியை பட்டத்து இளவரசராக்க உடன்பட்ட, தி.மு.க இராஜாங்க அமைச்சர்கள் - இராஜகுரு துரைமுருகன் என்ன பதில் சொல்லப்போகிறார்?

Tamil Nadu Minister P Moorthy seeks Cabinet berth for Chepauk MLA Udhayanidhi Stalin

உதயநிதியை பட்டத்து இளவரசராக்க உடன்பட்ட, தி.மு.க இராஜாங்க அமைச்சர்கள் - இராஜகுரு துரைமுருகன் என்ன பதில் சொல்லப்போகிறார்?
X

MuruganandhamBy : Muruganandham

  |  17 Dec 2021 6:33 AM GMT

சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் வழங்க, வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். உதயநிதியின் தேர்தல் பணிகள் பாராட்டுக்குரியது என்றும் அமைச்சராக இருந்து அவர் மாநிலம் முழுவதும் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்றும் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மூர்த்தி, சமீபத்திய தேர்தலின் போது உதயநிதி எடுத்த முயற்சிகளை அனைத்து கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பார்த்துள்ளனர் என்றார். "மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அவரது சேவையை சேப்பாக்கம் தொகுதிக்கு மட்டும் குறைக்கக் கூடாது," என்றார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரும் இதேபோன்ற வேண்டுகோளை சமீபத்தில் பொதுவெளியில் கூறியது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையில் உதயநிதி இடம்பெற, தி.மு.க., அமைச்சர்கள் வரிசையாக ஆதரவு அளித்து வரும் நிலையில், மூத்த அமைச்சர் துரைமுருகன் மவுனமாக இருப்பதால், அவருக்கு உடன்பாடு இல்லையா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

கருணாநிதி இருந்தபோது, ஸ்டாலின் அடுத்த தலைவராக வர வேண்டும், வருங்கால முதல்வராக வேண்டும் என, துரைமுருகன் ஆதரித்துப் பேசினார். அதேபோல், ஸ்டாலின் மகன் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பதை, துரைமுருகன் எந்த இடத்திலும் ஆதரித்து பேசவில்லை. அவர் தாமாக முன்வந்து அறிவிக்க வேண்டும் என, ஸ்டாலின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

அறிவாலயத்தில் தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடக்கிறது. அதில், உதயநிதி அமைச்சராக வேண்டும் என ஆதரித்து, மாவட்டச் செயலர்கள், மூத்த அமைச்சர்கள் பேசுவர் என்ற எதிர்பார்ப்பும், இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் உள்ளதாக திமுக வட்டாரத்தினர் கூறியுள்ளனர்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News