இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!! வரி 18% குறைப்பு!!
By : Bharathi Latha
Update: 2026-02-03 12:43 GMT
இந்தியா மற்றும் அமெரிக்காவின் வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25% லிருந்து 18% ஆக குறைப்பதாக அறிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி உடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடலை மேற்கொண்ட பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர வரிவிதிப்பு கொள்கையின் அடிப்படையில் இந்தியாவுக்கு 50% வரி விதித்திருந்த அமெரிக்கா, தற்போது அதை 18% குறைத்துள்ளது.
இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான உறவு முன்பை விடவும் வரும் நாட்களில் வலுவாக இருக்கும் என ட்ரம்ப் தெரிவித்தார்.