லாக்-டவுன் வாய்ப்பில்லை!! அமித் ஷா உறுதி!!

Update: 2026-03-30 01:26 GMT

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா லாக்-டவுனுக்கு வாய்ப்பு இல்லை என  தெரிவித்துள்ளார். அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது  நாடு முழுவதும் நிலைமை சீராக உள்ளதாக கூறியுள்ளார்.


உலக அளவில் எரிபொருள் நெருக்கடி இருக்கும் சூழலில், இந்தியாவில் பெட்ரோல், டீசல், எல்பிஜி தட்டுப்பாடு இல்லை என கூறினார். விலை உயர்வை கட்டுப்படுத்த கலால் வரியை அரசு குறைத்துள்ளதாக கூறினார்.


அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வர்த்தக சிலிண்டர் விநியோகம் 70% உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் கட்டுப்பாடுகள் உள்ளன.

Tags:    

Similar News