கோவையில் பட்ஜெட் விமர்சன சுவரொட்டி சர்ச்சை!! பாஜகவினர் 23 பேர் கைது!!

Update: 2026-02-07 07:02 GMT

மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து கோவையில் திமுக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததை தொடர்ந்து  பாஜக-அதிமுக தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதி முட்டை என்றும், ‘பட்ஜெட் 2026 ஒரு பூஜ்யம்’ என்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.


இதையடுத்து, பாஜக இளைஞரணியை சேர்ந்த சிலர், மத்திய பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளைக் கிழித்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் சுவரொட்டிகளைக் கிழித்த பாஜகவினரைக் கைது செய்தனர்.


சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 14 பேர், சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 9 பேர் என 23 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News