2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்!! முக்கிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகள்!!
2026-27 பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விகிதங்களிலும், வரம்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை. ரூ.12.75 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வருமான வரி எதுவும் இல்லை.
புதிய வருமான வரி சட்டம், 2025, வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எளிமையாக்கப்பட்ட வருமான வரி விதிகள் மற்றும் படிவங்கள் விரைவில் வெளியிடப்படும்.
உயிர்காக்கும் மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டில் ‘பயோ பார்மா சக்தி’ திட்டம் கொண்டுவரப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு திட்டத்தின் மதிப்பு ரூ.40,000 கோடியாக உயர்த்தப்படுகிறது.
காதி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறையில் சீர்திருத்தம் கொண்டுவர மகாத்மா காந்தி கிராம சுவராஜ் திட்டம் அறிமுகம். தேங்காய் ஊக்குவிப்பு திட்டம், ‘கேலோ இந்தியா’ திட்டம், நீர்வழிப் போக்குவரத்து மேம்பாடு ஆகியவை அறிமுகப்படுத்தப்படுகின்றன.