காமெடி நடிகர் இறப்பிற்க்கும் தடுப்பூசிக்கும் தொடர்பா? சென்னை மாநகராட்சி விளக்கம்!

Update: 2021-04-17 12:10 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி இருந்த விவேக் அவர்கள் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, இன்று அவர் காலமான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில் ஒரு சிலர் விவேக் மரணத்திற்கும் அவர் போட்டுக் கொண்ட கொரோனா தடுப்பூசிக்கும் சம்பந்தப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும், மேலும் ஒரு சிலர் விவேக் மரணத்திற்கும் அவர் போட்டுக் கொண்ட கொரோனா தடுப்பூசிக்கும் சம்பந்தப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இந்தநிலையில் ஏற்கனவே மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் விவேக்கின் மரணத்திற்கும், அவர் போட்டுக்கொண்ட தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்று விளக்கம் அளித்த நிலையில், தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளது: விவேக் இறப்பிற்கும் அவர் போட்டுக்கொண்ட தடுப்பு ஊசிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், விவேக் மறைவு என்பது பேரிழப்பு தான், ஆனால் அதை தடுப்பூசியுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Similar News