காமெடி நடிகர் மறைவுக்கு நேரில் இரங்கல் தெரிவித்த திரைப்பிரபலங்களின் புகைப்படங்கள்!

Update: 2021-04-17 12:14 GMT

தமிழ் சினிமாவில் கருத்துக்கள் நிறைந்த காமெடியாக மக்கள் மனதில் சிந்திக்க வைத்தவர் நடிகர் விவேக்.அவர் இன்று அதிகாலை காலமான நிலையில் அவருடைய உடல் அவருடைய விருகம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்களும், திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.மேலும் அரசியல் தலைவர்கள், உள்பட பலரும் தற்போது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தநிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் இந்த கோவிட் பரவல் நிலையிலும் நடிகர் விவேக்கின் உடலுக்கு நேரில் வந்து அவர்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர். முக்கியமாக நடிகை த்ரிஷா, நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் விக்ரம், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, நடிகர் நாசர், நடிகர் சூரி, நடிகர் கார்த்தி, இயக்குனர் லிங்குசாமி, நடிகர் சரத்குமார், நடிகர் சந்தானம், நடிகர் யோகிபாபு, நடிகை ஆர்த்தி, நடிகை இந்துஜா, உள்பட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





Similar News