தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகைக்கு கொரோனா தோற்று.அந்தவகையில் சூர்யா நடித்த 'வாரணம் ஆயிரம்' விஷால் நடித்த 'வெடி' மாதவன் ஆர்யா நடித்த 'வேட்டை' உள்பட தமிழ் படங்களிலும் பல ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியுள்ளது:நேற்று தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் கடவுள் கிருபையால் தனது குழந்தைகள் நலமாக இருக்கிறார்கள் என்றும் தான் தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் இந்த நேரத்தில் அனைவரும் மன உறுதியுடன் கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும் சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவரது ரசிகர்கள் விரைவில் குணமாகி வரவேண்டும் என சமூக வலைத்தளங்களில் அவர்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.